தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
Latest topics
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்
by  Sun Mar 31, 2013 7:17 am

Log in

I forgot my password

Top posting users this week

Social bookmarking

Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 amஇதழ்களை உருவாக்க உதவும் இலவச பயன்பாட்டு மென்பொருள்

Go down

இதழ்களை உருவாக்க உதவும் இலவச பயன்பாட்டு மென்பொருள்

Post by  on Sun Apr 29, 2012 5:28 pm

கதை ,கட்டுரை மற்றும் துணுக்குகள் போன்றவைகளுடன் படங்களையும் இணைத்து வாசகர்களை கவருந்தன்மையுடன் இதழ்களை(magazine) உருவாக்குவது என்பது மிகவும் சிரமமான பணியாக இருந்துவந்தது ,ஆனால் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக கணினியின் மென்பொருளில் ஏற்பட்ட முன்னேற்றங்களினால் இவைகளை மிகச்சுலபமாக உருவாக்கலாம் என்ற நிலை தற்போதுள்ளது,

Adobe creative suite 3, Quark Xpress போன்ற பயன்பாட்டு மென்பொருள்களின் வரவால் பத்திரிகை துறை மிகவும் பெரிதும் முன்னேற்ற மடைந்துள்ளது என்பதே உண்மையாகும் ஆனாலும் இந்த DTP பயன்பாட்டு மென்பொருட்களுக்கு ரூபாய் 35000 முதல் 40000 வரை செலவிட வேண்டியுள்ளது,

2001 ஆம் ஆண்டிற்கு பிறகுமென்பொருள் துறையானது திறமூலமாக மாறிவரும் சூழலில்Franz Scmid என்பவர் scribus என்ற DTPக்கான இலவச மென்பொருள் நிரல்தொடரை லினக்ஸ் தளத்தில் இயங்குமாறு வெளியிட்டுள்ளார்

இது லினக்ஸ் தளத்தில் மட்டுமல்லாது விண்டோ மற்றும் மேக் தளங்களிலும் நன்கு செயல்படும் தன்மையுடன் விளங்குகிறது

வரைகலை வடிவமைப்பாளர் இதனை தங்களுக்கு பொருத்தமானதாக இல்லை என குறை கூறினாலும் பின்வரும் பல்வேறு வகையான நோக்கங்களுக்காக இதனை பயன்படுத்தி கொள்ளலாம்

1, செய்திதாள், பருவ இதழ், சுவர்விளம்பரபடம், அழைப்பிதழ்அட்டை உருவாக்குவதற்காக

2,அச்சிடும் நிறுவனங்களில் பல்வேறு அச்சிடும் பணிகளுக்காக

3, லோகோ மற்றும் மாதிரிகளை அச்சிடுவதற்காக

4,படைப்புகளை பிடிஎஃப் ஆக உருமாற்றம் செய்து பயன்படுத்த

டிடிபி ஆனது சிக்கலான வெவ்வேறு வடிவமைப்புகளை உடைய பலஉறுப்புகளை உள்ளடக்கியதாகும், அதனால் இந்த பணியின்போது ஏராளமான பிழை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன,அச்சுக்குமுன் இவ்வாறு ஏற்படும் பிழைகளை கண்டுபிடிக்க preflight verifier என்ற கருவி பயன்படுகிறது, இவ்வாறான வாய்ப்புகள் scribus லும் உள்ளது.


படிமுறை-1-பதிவிறக்கும் செய்து நிறுவுதல்: முதலில் இந்த scribus பயன்பாட்டினை [You must be registered and logged in to see this link.] என்ற வலைதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கும் செய்துகொள்க, இந்த பதிவிறக்கம் பணியை செய்யுமுன் நம்முடைய இயக்கமுறைமைக்கேற்ற (os )பதிப்பாக தெரிவுசெய்க அதற்கேற்றவாறான கட்டளைகளை அடுத்த பக்கத்திலிருந்து படித்து தெரிந்து கொள்க, Adobe postscript , PDF இன் கோப்புகளுக்கு மூலமொழிமாற்றியாக செயல்படும்

முதலில்Ghost script என்பதை பதிவிறக்கம் செய்யவேண்டும் அதற்காக திரையில் உள்ள Ghost script8,54என்பதையும் பின்னர் +download link என்பதையும் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக, உடன் விரியும் பட்டியில் ‘open a new window ‘என்பதை தெரிவு செய்க, அதன்பின்னர் இதில் கூறும் படிமுறைகளை பின்பற்றி ‘download Scribus’ என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் scribus என்ற மென்பொருள் நம்முடைய கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும்,

இந்த சமயத்தில் ‘The following programs are missing Ghostscript: you cannot use EPS image or postscript print preview’ என்ற எச்சரிக்கை செய்தி கிடைக்கும் இதற்கு file / preferences என்பதை தெரிவு செய்க,இடதுபுற பலகத்தில் உள்ள ‘External Tools’ என்பதை தெரிவுசெய்து சொடுக்குக Postscript interpreter என்பதுgswin32c.exe என்ற கோப்பில் இருக்கும்,இது இருக்குமிடம் C:/program files / gs/gs8.54 / bin /gswin32c.exe என்பதாக உள்ளதா என சரிபார்க்கவும் இவ்வாறு இது சரியாக அமர்ந்திருந்தால் இவ்வாறான பிழை ஏற்படாது,

படிமுறை-2-திருத்தமற்ற இடஅமைவுபடம் வரைதல்: ஒரு தாளில் இடஅமைவுபடம் சாதாரண சுற்றெல்லையாக ஆக வரைந்துகொள்க இவ்வாறான இதன் ஒவ்வொரு இடஅமைவுபடத்திலும் உரை,உருவப்படம், காலி இடம் ஆகியவை தங்களுக்குள் முன்பின் சரிசெய்து மிகச்சரியாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும்,

இவ்வாறு திருத்தமற்ற சுற்றெல்லை வரையும்போது இதில் அதிகஅளவு இடநெருக்கடியாகவோ அல்லது ஒன்றுமே இல்லாமல் காலியாகவோ இல்லாமல் போதுமான அளவு இடவசதியுடன் மிகப்பொருத்தமாக இருக்குமாறு இதனை உருவாக்குக,

இதன் ஒவ்வொரு பக்கத்தையும் திறுத்தமற்ற விளக்கபடமாக இடஅமைவுபடத்தின் வகைக்கேற்ப வரைந்துகொள்க,இதில் இரண்டு பெட்டிகளை ஒன்றில் தொடர்ச்சியான உரையும் மற்றொன்றில் மிகவும் வலதுபுறமாக இருக்குமாறும்உருவாக்குக, இடையில் ஆங்காங்கு படங்களை உள்ளிணைத்து மிகுதிஇடங்களில் உரைகளையோ உருவபடங்களையோ முன்பின் சரிசெய்து அமைத்துகொள்க,

இவ்வாறு இடஅமைவுபட சுற்றெல்லையை ஒவ்வொரு பக்கத்திற்கும் உருவாக்கி விட்டால் அதன்பிறகு நம்முடைய பணி மிகச்சுலபமாகும் ,உருவபடத்தின் பண்பியல்பை RGM வடிவமைப்பிலிருந்துGMYK உருவபடத்தை(200dpi)அளவுள்ளதாக உருமாற்றுக, Gimp என்ற வரைகலை பயன்பாடு நம்மிடம் இல்லாமலிருந்தால் GYMK ஆதரிக்ககூடியhttp://www.blackfiveservices.co.uk/seperater.shtm1 என்ற வலைதளத்திலிருந்து
இதனை பதிவிறக்கம் செய்துகொள்க,

scribus இல் வேர்டு ஆவணத்தின் உரையை உருமாற்றும்செயல் பளுஅதிகம் நிறைந்த பணியாகும், படமில்லாத உரைஆவணமெனில் story editorஐகொண்டு நேரடியாகவடிவமைப்பு செய்துகொள்க

படிமுறை -3-வழிமுறை கோட்டை அமைத்தல்: scribus-ன் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் திரையில் தோன்றும் மின்வெட்டிற்காக சிறிதுநேரம் காத்திருக்கவும் பின்னர் ‘new document’ என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் preset layout and the margin guides என்பது தானாகவே அமைக்கப்பட்டிருக்கும்

options என்பதில் நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துகொள்க பக்கங்களின் எண்ணிக்கை 2 என்றும் உள்வெளி (inside outside)விளிம்பின் அளவை 8.000mm என்றும் மேல் கீழ் விளிம்பின் அளவை 12.000 mm என்றும் அமைத்திடுக, ஆவண இடஅமைவு படத்தில் ‘double sided என்பதை தெரிவுசெய்து இடதுபுறம் முதல் பக்கமாக இருப்பதை உறுதி செய்து கொள்க,

தேவையான அளவு precisionஇல் சரிசெய்து கொள்க,இவைகள் உரையையும் உருவபடத்தையும் சரிசெய்ய உதவுகிறது,

பின்னர்page/manage Guides என்பதை தெரிவுசெய்க,உடன் தோன்றும் உரையாடல் பெட்டியின்Rows and Column என்பதில் கீழிறங்கு பட்டியிலிருந்து 3 என நெடுவரிசைக்கு (Column) தெரிவு செய்க,நெடுவரிசை இடைவெளி(Column Gap) என்பதற்கு 5,000mm என தெரிவுசெய்க, Refer to என்பதில் marginesஎன்றவாய்ப்பை தெரிவுசெய்க view show Guides, show Baseline ஆகியவற்றை தெரிவுசெய்து சொடுக்குக இதில் உள்ள அடிப்படைகோடு (baseline) என்பது உரைத்தொடரின் கற்பனை கோடாகும் இது மிகச்சரியாக நெடு வரிசையும் பக்கமும் அமைவதற்கு உதவுகிறது,சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் தோன்றும் பட்டியில் sample text என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக,இதில் உள்ள கோட்டு இடைவெளியை அப்படியே அடிப்படை கோட்டிற்கும் பின்பற்றுக,

படிமுறை -4-முதன்மை பக்கத்தை உருவாக்குதல்: பக்கங்களின் எண்கள் தலைப்பு முடிவு ஸ்பாக்ஸ் , வேறுவடிவமைப்பு உறுப்புகளை முதன்மை பக்கத்தில் உள்ளடக்கியதாகும், பல்வேறுவகைகளில் முதன்மை பக்கங்களை உருவாக்கி பக்கங்களின் தேவைக்கேற்றவாறு செயற்படுத்திகொள்ளலாம், பக்கங்களின் எண்கள் மட்டும் தொடர்ச்சியான எண்களாக இருக்குமாறு மாற்றியமைத்து கொண்டே வரவேண்டும், Edit/Master pagesஎன்பதை தெரிவு செய்க,உடன்விரியும் பட்டியில் New Master pageஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் இதற்கு ஒரு பெயரிடுக,

அதன் பின்னர் கீழ்புறமுள்ள மூலையில் உரைபெட்டியை உள்ளிணைத்து Insert /charcter/page number என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் மற்றொரு உரைபெட்டி அல்லது உருவப்படத்தின் பெயரையும் தேர்வுசெய்பெட்டியின் பெயரையும் நடப்பு பக்கத்தில் உள்ளீடு செய்க தேவையானால் மாறுதல் செய்து கொள்க,பிறகு முதன்மை பக்கத்தை மூடிவிடுக, பின்னர் page / apply Master page என்பதை தெரிவுசெய்து சொடுக்கியபின் புதியதாக உருவாக்கப்பட்ட முதன்மை பக்கத்தை தெரிவு செய்து கொள்க,

படிமுறை -5-உரையை உள்ளிணைத்தலும் பதிப்பித்தலும்: வேர்டு ஆவணத்தை திறந்தவுடன் உரையை தட்டச்சு செய்யலாம் ஆனால் இந்த இதழ் பயன்பாடுகளில் உரையையும் உருவபடத்தின் சட்டத்தை(frame) உருவாக்கிய பிறகே உரையை தட்டச்சு செய்யமுடியும்

இந்த சட்டங்களில் எங்கெங்கு படம் அல்லது உரை இருக்கவேண்டும் இவை எவ்வாறு இருக்கவேண்டும் என பிரித்தறிகிறது, பெரும்பாலான இடஅமைவுபடங்கள் இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே இடஅமைவுபடமாக உள்ளன,

Insert Text box என்பதை தெரிவுசெய்து சொடுக்கி உரைபெட்டியை வரைந்திடுக, அதன்பின்னர் இந்த உரையை நகலெடுத்து இருமுறை உரைபெட்டியை இருமுறை சொடுக்கி இதனை ஒட்டி கொள்க, பின்னர் இந்த உரைகளை தெரிவு செய்து கொண்டுstory editor என்ற குறும்படத்தை(icon) தெரிவுசெய்து சொடுக்குக,

Scribus இல் ஒவ்வொரு பத்தியும் தனித்தனி வடிவமைப்பில் உள்ளதால் தனித்தனி எண்களை வெவ்வேறு வகையின் பாவணையி(style) ல் வடிவமைப்பு செய்க புதிய பாவணையை உருவாக்கி no style என்பதை தெரிவுசெய்துகொள்க,பின்னர் edit style என்பதை தெரிவுசெய்து சொடுக்குக, இதற்கு Body Text எனப் பெயரிடுக பின்னர் தேவையான பாவணையை அமைத்து Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

பின்னர் No style என்பதை தெரிவு செய்தவுடன் விரியும் கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான பாவணையை தெரிவு செய்து கொள்க,update என்ற குறும்படத்தை தெரிவு செய்தால் நாம் செய்த மாறுதல் செயல்படுத்தப்படும் இவ்வாறு தலைப்பு துனைத்தலைப்பு தலைப்பு ஆகியவற்றிற்கு பொருத்தமான பாவணையை அமைத்துகொள்க,

பெரும்பாலும் உரையானது ஒரே பக்கத்தில் அமையாது தொடர்ந்து அடுத்தடுத்த பக்கத்திற்கும் செல்லும் அந்நிலையில்அடுத்த பக்கத்திலும் உரைபெட்டியை வரைந்து மிகுதி இருக்கும் உரையை முந்தைய பக்கத்திலிருந்து தெரிவுசெய்து link frame என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கி காலி உரைபெட்டியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மிகுதி உரை அடுத்த பக்கத்திலும் தொடரும்,

படிமுறை- 6-ஒரு பக்கத்தில் படங்களை அமைத்தல்: உருவப்படத்தை( image) உள்ளிணைப்பதற்கு insert insert/image frame என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக ,பின்னர் ஒரு உரைபெட்டியை வரைக, அதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலது புற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியில் Get image என்பதை தெரிவுசெய்க

பின்னர்படங்கள் உள்ள கோப்பினை தெரிவு செய்து திறந்து கொள்க,

படத்தின் அளவை சரிசெய்ய சுட்டியின் வலது புற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியடன் விரியும் சூழ்நிலை பட்டியில் property என்பதை தெரிவு செய்க அல்லது F2 என்ற செயலிவிசையை அழுத்துக,

உடன் தோன்றம் properties என்ற உரையாடல் பெட்டியில் image என்றதாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

உடன் விரியும் திரையில் scale to frame size என்பதில்proportion என்பதை தெரிவு செய்து சரியாக இந்த சட்டத்திற்குள் அமையுமாறு செய்க அல்லது free scalingஎன்பதை தெரிவுசெய்து அமைக்கவும்

உருவபடத்தைimage சுற்றி உரையானது மடங்கி அமர்வதற்கு properties என்ற உரையாடல் பெட்டியில் shape என்பதை தெரிவு செய்க Text flow around frame என்பதையும் using contour line என்பதையும் தெரிவுசெய்க,

பின்னர் edit shape என்பதை தெரிவுசெய்து சொடுக்குக படத்தை சுற்றி increase அல்லது decreaseஆக அமருமாறு செய்து அமைத்துகொள்க,

படத்தின் ஏதேனுமொரு முடிவு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

உடன் விரியும் பட்டியில் Add node என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உருவபடத்தின் ஒரு பகுதியில் உரை இல்லாமலும் மற்றஇடங்களில் உரை இருக்குமாறும் அமர்ந்துவிடும் அதனால் delete node என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கினால் தேவையற்ற இடங்களில் உள்ள உரை நீங்கிவிடும்

F2 என்ற செயலிவிசையை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் உரையாடல் பெட்டியில் color என்ற தாவியின் பொத்தானை தொரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் fill properties என்பதை தெரிவு செய்துshadeஐ தெரிவு செய்து கொள்க

ஒவ்வொரு கட்டுரையிலும் இரண்டு அல்லது மூன்று வண்ணங்களையும்(Color), நிழல்(shade) களையும் மட்டும் தெரிவுசெய்க, வெவ்வேறு உருவங்களை(shape) உள்ளிணைத்த (insert) பிறகு இதனை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் convert to என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக,விரும்பும் குறிமுறையை தெரிவு செய்து உருமாற்றம் செய்க, Level என்பதை தெரிவுசெய்து எங்கு அமைந்திடவேண்டும் என முடிவுசெய்க,

படிமுறை -7-இறுதிச்சுற்று பணிகள்: இவ்வாறு உருவபடத்தை சுற்றி உரைபெட்டியை உள்ளிணைக்கும் போது அழகாக அமையாது அதனால் இதனை பதிப்பான்(editor) மூலம் சரிசெய்து சரியாக அமையுமாறு செய்க,

Text flows around frame என்பதை உருவப்படபெட்டியை சுற்றி அல்லது ஒன்றுக்கொன்று overlap ஆகுமாறு தெரிவுசெய்து கொள்க,grids , guide ஆகியவற்றை மாற்றி பிரிபலிக்கச்செய்து சரியாக அனைத்தும் அமர்ந்திருக்கின்றதாவென சரிபார்த்து உறுதிசெய்து கொள்க

படிமுறை -8-இதழை அச்சிடுதல்:முன்பெல்லாம் Quark Xpress என்ற பயன்பாட்டில் இவ்வாறான பணிமுடிந்ததும் அப்படியே அச்சிற்கு அனுப்பிவிடுவார்கள் ஆனால் இப்போது இவ்வாறு உருவாக்கிய கோப்பினை கையடக்க(PDF) ஆக உருமாற்றிய பிறகுதான் அச்சுக்கு அனுப்புகின்றனர்

அதனால் பயனாளர் DTPபயன்பாட்டு மென்பொருளை வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை ,மேலும் இது நிரந்தர எழுத்துரு ஆகும் அதன் பயனால் ஏதேனும் கைதவறுதலாக பிழை ஏற்பட்டு அமைப்பு மாறிவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை

File/Export/save as PDF என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து fonts என்ற தாவித்திரையை தோன்றசெய்து எழுத்துருவை உள் பொதிந்து அமைத்திடுக,

.sk என்ற பின்னொட்டுடன் செல்லும் கோப்பினை பெறுபவர் collect for output என்பதை பயன்படுத்தி அனைத்தையும் பார்வையிடலாம்,file/ collect for output என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி திறந்து பார்க்கலாம்

Indent font என்ற கட்டளையானது பெறுபவரிடம் இந்த எழுத்துரு இல்லையென்றாலும் பார்வையிட உதவுகிறது,

Scribus மூலம் இவ்வாறான படிமுறையைபின்பற்றி ஒரு இதழை மிகச்சுலபமாக உருவாக்கலாம்


மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum