தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



லினக்ஸ் சான்றிதழ் கல்வி

Go down

லினக்ஸ் சான்றிதழ் கல்வி Empty லினக்ஸ் சான்றிதழ் கல்வி

Post by  Sun Apr 29, 2012 5:30 pm

மைக்ரோ சாப்டிற்கு மாற்றாக செலவில்லாத ஒப்பன்சோர்ஸ் புரோகிரமாக லினக்ஸ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வருகின்றது. அதற்கு ஈடுகட்ட கூடிய அளவிற்கு இந்த ஒப்பன்சோர்ஸ் புரோகிராம்களை எழுதி இயக்க கூடிய அளவிற்கு தொழில் நுட்ப வல்லுநர்களின் தேவையும் வளர்ந்து கொண்டே வருகின்றது இந்த தளங்களின் பணிபுரியக்கூடிய தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆக வளர்வதற்கு பின்வரும் கல்வியியல் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்,

இன்றைய நடைமுறையில் பல்வேறுவகையான லினக்ஸ் சான்றிதழ் படிப்பு கிடைக்கின்றன. பொதுவாக இந்த லினக்ஸ் சார்ந்த படிப்பை ஆரம்பநிலை, இடைநிலை,உயர்நிலை என மூன்றுவகையாக பிரிக்கலாம்,

சாதாரனமாக லினக்ஸ் பற்றி ஒன்றுமே தெரியாத பயிற்சி ஏதும் இல்லாதவர்கள் கூட லினக்ஸ் பற்றிய அடிப்படையான அறிவை மட்டும் வளர்த்து கொண்டு இதன் ஆரம்ப நிலை சான்றிதழை பெறமுடியும்.

ஒரு டெக்ஸ்டாப்பை அல்லது வொர்க்ஸ்டேஷன் ஒன்றை எவ்வாறு அமைவு செய்வது அல்லது அதில் உள்ள தவறுகளை எவ்வாறு களைவது என்பன போன்ற அறிவு பெற்றிருந்தால் இடை நிலை கல்வி சான்றுபெறமுடியும்.

சேவையாளர் (Server)கணிப்பொறியை எவ்வாறு அமைவு செய்வது அதனுடைய குறைகளை எவ்வாறு களைவது, சிறப்பு சேவையாளர்களை மற்றும் பயன்பாடுகளை எவ்வாறு நிருவகிப்பது எந்த பிரச்சிணை களையும் எவ்வாறு சமாளிப்பது என்ற மிகத்திறன் வாய்ந்த நிலையை உருவாக்க உதவுவது உயர்நிலை சான்றிதழாகும்,.

உலகளாவிய அளவில் பல லினக்ஸில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பு உள்ளன அவைகளை நன்கு கற்றுதேர்வு எழுதிவெற்றிபெற்றால் ஒவ்வொரு இளைஞரின் எதிர்காலமும் கண்டிப்பாக மிக பிராகாசமாக அமையும் எந்பது திண்ணம்

இந்த சான்றிதழ்கள் கல்வி பற்றி ஒவ்வொன்றாக இப்போது காண்போம்

Iஆரம்பநிலை சான்றிதழ் கல்வி தேர்வுகள்,.

1. நாவல் CLP (Certified Linex Professional) இது லினக்ஸின் ஆரம்பநிலை சான்றிதழ் தேர்வாகும், லினக்ஸ் கல்வியில் உங்கள் வாழ்க்கை பாதையை துவங்க இது உதவுகிறது. ஆயினும் இது CLE(Certfied linex Engineer)யின்ஆரம்பதேர்வன்று.

2,RHCT(Red Hat Certified Technician) இது ரெட்ஹேட் தளத்தினை பயன்படுத்த உதவும் தொடக்கநிலை தேர்வாகும், இதை தெரிவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு கட்டளை வரிகளைபற்றி முன் கூட்டியே தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை, அடிப்படை நெட்வொர்க்கிங், பைல்சிஸ்டம், ரெட்ஹேட் பற்றியும், கணிப்பொறியின் ஹார்டுவேர் பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் மட்டும்போதும், பொதுவாக லினக்ஸை பற்றிய ஆரம்ப அறிவை பெற இந்த சான்றிதழ் வழங்குகிறது.

3,லினக்ஸ் புரோபஷனல் இன்ஸ்டிடியூட்டின் LPIC1,இதிலும் முன்கூடடியே லினக்ஸ் பற்றியும்,கட்டளை வரிகளை எவ்வாறு பயன்படுத்துவதுஎன்பது பற்றியும் எதுவும்தெரியதேவையில்லை,, இந்ததேர்வு பெரிய ஸிஸ்டத்தை எவ்வாறு கையாளுவது, சாதாரனமான பராமரிப்பை எவ்வாறு செய்வது. காப்பு நகல் (Back Up) எவ்வாறு செய்வது,கோப்புகளை மீளஎவ்வாறுஅழைப்பது,வளாக இணைப்பை(LAN) எவ்வாறு ஏற்படுத்துவது .OS ஐ எவ்வாறு நிறுவுவதுஎன்பன போன்ற அடிப்படை செயல்களை தெரிந்து கொள்ள செய்கிறது.

II.இடைநிலை சான்றிதழ் கல்வி தேர்கள்,.

1,comp TVAலினக்ஸ் : ஓபன் சோர்ஸ் தொழில் நுட்பத்தை பற்றிய ஆரம்ப அறிவை தெரிந்து கொள்ளவும்,. எவ்வாறு இதனை நிறுவுவது,அமைவுசெய்வது, நெட்வொர்க்கை நிர்வகிப்பது, அதில் ஏற்படும் தவறுகளை எவ்வாறு களைவது என்பனபோன்ற செயல்களை லினக்ஸ் அடிப்படையிலான சேவையாளர் டெக்ஸ்டாப்பில் செயல்படுத்துவதற்கான அறிவை வளர்த்து கொள்ள இந்த இடைநிலை தேர்வு உதவுகிறது.

2,LPIC2, LPIC1தேர்வை முடிப்பவர்களை மட்டும் இதனை எழுத அனுமதிக்கப்படுகிறது. இதில் OS ஐ பராமரிப்பது, குறைகளை களைவது,சிறிதான மற்றும் இடைநிலை அளவு லினக்ஸ் அல்லது மைக்ரோ சாப்டின் வின்டோ OS களை எவ்வாறு நிருவகிப்பது எனத் தெளிந்த அறிவை வளர்த்து கொள்ள இந்த தேர்வு உதவுகிறது.

III.உயர்நிலை சான்றிதழ் கல்விதேர்வுகள்.

1, நாவல் CLE (Certified Linex Engineer) இது நாவல் லினக்ஸில் மிக அனுபவம் வாய்ந்தவர்களுக்கான தேர்வாகும்,இந்தேர்வு லினக்ஸ் OS ஐ நிறுவுதல், அமைவு செய்தல், பழுதுபார்த்தல், நாவல் தொடர்பான பிரச்சினைகளை சமாளித்து தீர்வுசெய்தல், லினக்ஸை மிக சிறப்பாகவும் தனித்தன்மையுடனும் இயங்க செய்தல் ஆகியவை பற்றி மிகத்தௌ்ளத் தெளிவாக அறிந்துகொள்ள உதுவுகிறது, இந்ததேர்வின் சான்று பெற்றஒருவர் மிக உயர்நிலையில் வினக்ஸ் சிஸ்டத்தை நிருவகிக்கும்திறனை பெற்றவர்ஆவார்.

2,RHCE(Read hot certificted Engineer) இதில் பொதுவாக நெட்வொர்க் சேவையை உருவாக்குதல்,பராமரிப்பு செய்தல் அதன் பாதுகாப்பை வளப்படுத்துதல், ஆய்வுசெய்தல், பிரச்சினை ஏதுமிருந்தால் சரிசெய்து பழுது பார்த்தல் போன்றஅறிவை வளப்படுத்தி மேம்படுத்தும் திறனை இதுவழங்குகிறது

2,LPIC3: இது முது நிலை சான்றிதழ் தேர்வாகும், சுதந்திரமான லினக்ஸ் அடிப்படையிலான உயர்நிலை அறிவை பெற உதவுகிறது. மிகப்பெரிய நிறுவனத்தில் லினக்ஸ் சார்ந்த தளத்தை நிருவகிக்கும் திறனை இதுவழங்குகிறது,

இதுவரை பார்த்தவைகளில் ரெட் ஹேட்டை அடிப்படையாக கொண்ட RHCTமற்றும் RHCE ஆகிய இரண்டும் ஏட்டு கல்வியுடன் செய்முறை பயிற்சியையும் பரிசோதிக்கும் தேர்வாக கட்டமைக்கபட்டுள்ளது. இந்த தேர்வு 5 மணி நேரம் கொண்டதாகும்,இது பொதுவாக செக்சன் 1 செக்சன் 2 என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. செக்சன் 1 தேர்வில் 2 1./2 மணிநேரம் அனுமதிக்கப்படுகிறது.

இதில் தேர்வு எழுதுபவரிடம் கணிப்பொறி உதிரிபாகங்களை வழங்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் கணிப்பொறியை மிகச்சரியாக பொறுத்தி அமைத்துவிட வேண்டும என கோரப்படுகிறது,

செக்சன் II இது மூன்று மனிநேர தேர்வாகும் இதில் செக்சன் I ல் பொறுத்தபட்ட வெற்று கணிப்பொறியை தேர்வாளரிடம் வழங்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் பயாஸ் மற்றும் சீமாஸ் செட்டிங்கை அமைத்து OS களை நிறுவி அமைவுசெய்து இதை இயக்கி காண்பிக்கவேண்டும், மேலும் எவ்வாறு நம்முடைய நிகழ்கால வாழ்க்கை சூழலில் இந்த OS கள் இணைந்து செயல்படுகிறது என்ற ஆழ்ந்த அறிவை பரிசோதிக்கிறது. நிகழ்காலத்தை பற்றி அறிந்து கொள்ள வில்லையெனில் இந்த தேர்வில் வெற்றி பெற இயலாது.

இந்த RHCE யானது RH033, RH133 ஆகிய இரண்டு மாடூல்களை கொண்டது. இவையிரன்டையும் முடித்தால் மட்டுமே RHCT ரெட் ஹேட் தொழில் நுட்ப வல்லுனர் என்ற சான்றிதழ் பெறமுடியும். இதற்கு ரூபாய்10000/.= கோர்ஸ்பீஸாகவும, ரூபாய்7500/= தேர்வு கட்டணமாகவும் செலவாகும்,

இதன்பிறகு RH 253 என்றமாடூல்ஸை முடித்தால் RHCEஎன்ற தேர்வை முடித்ததாக சான்றிதழ் பெற முடியும்.

ஒவ்வொரு மாடூல்ஸையும் எழுதுவதற்கு. ரூபாய் 6000/= மற்றும் ரூபாய்7500/=தேர்வு கட்டணமாகவும் செலவாகும். இந்த ரெட் ஹேட் RHCTசான்றிதழ் பெற்று ஓரிரு வருட அனுபவம் உடையவர்கள் ஆண்டிற்கு ரூபாய் ஐந்துஇலட்சம் வரை வருமானம் ஈட்டமுடியும். RHCE சான்றிதழ் பெற்றவர்கள் ஆண்டிற்கு ரூபாய் எட்டு இலட்சம் வரை பொருளீட்ட முடியும். இந்த ரெட்ஹேட் பயற்சி மையம் எங்கெங்கு உள்ளது.எவ்வாறு இதில் பதிவு செய்து பயற்சிபெறுவது போன்றவிவரங்களை [You must be registered and logged in to see this link.] என்ற வலை தளத்திற்கு சென்று தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.

Novel linex Certification

உலகாளவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாக நாவல் லினக்ஸ் சான்றிதழ் உள்ளன. இவையனைத்தும் SUSE லினக்ஸ் அடிப்படையாக கொண்டவையாகும.

ஆனால் இதன் அடிப்படை தியரியானது அனைத்து லினக்ஸிற்கும பொதுவானதுஆகும் செய்முறை பயிற்சி மட்டும் SUSE லினக்ஸ் பற்றியதாகும்

இதில் CCE,CLP ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் முடிக்க வேண்டும் இந்த தேர்வில் இரண்டு மணிநேரம் மட்டுமேஅனுமதிக்கப் படுகிறது, இதுவும்ரெட் ஹேட் போன்று,OS சிஸ்டத்தை நிறுவுதல், அமைவு செய்தல்,பிரிண்டரை அமைவுசெய்தல், நெட்மெயிலை நிறுவுதல், போன்ற செயல்களை செய்யுமாறும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படியும் தேர்வாளர் கேட்டுக் கொள்ளப்படுவார்.

ஆயினும் இந்தியாவில் CLP மட்டுமே செயல் படுத்தபடுகிறது. CLP ஆனது இரண்டுமாடூல்கள் பல்வேறு லினக்ஸ் பதிப்பின் அடிப்படையில் உள்ளது. முக்கியமான நகரங்களில் மட்டும் இரண்டுமாத்திற்கு ஒருமுறை மட்டும் இதனுடைய பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

Comp TIA’s லினக்ஸ் இது அடிப்படை கருத்துகள் மற்றும் செய்முறை பயிற்சி சேர்ந்த தொழில் சார்ந்த படிப்பாகும். இது பல்வாய்ப்பு வினா விடை அமைப்பை கொண்டது இவைகளை 94 நிமிடங்களில் முடிக்கவேண்டும். இதில் குறைந்தது ஆறுமாத பயிற்சியாவது பெற்றிருக்க வேண்டும் இது ஒரு லினக்ஸின் ஆரம்பநிலை தேர்வாகும் லினக்ஸை நிறுவுதல், பாராமரித்தல்,அமைவு செய்தல்,குறைகளை களைதல் போன்றவற்றில் அடிப்படை அறிவை பரிசோதிப்பதாகும், செய்முறைபயிற்சி ஏதும் இதில் இருக்காது,.

Linex Professional Institue LPI

இந்த லினக்ஸ் கல்வி நிறுவனம் ஜூனியர், இடைநிலை,சீனியர் ஆகிய மூன்று நிலைகளில் தேர்வுகளை நடத்துகிறது, இவை கடினமான தேர்வுகளல்ல, ஆயினும் லினக்ஸ் தளத்தை பற்றிய முழுமையான அறிவை இவை பரிசோதிக்கின்றன. LPI தேர்வுகள் ஜூனியர் முதல் சீனியர்வரை அனைத்து நிலைகளிலும் படிப்படியாகக் ஒரு தேர்வாளர் எவ்வாறு லினக்ஸை பற்றிய தெளிவான அறிவை பெற்றுள்ளார் என பரிசோதிக்கிறது.

LPICI இது ஒரு ஜூனியர் அளவு தேர்வுஆகும்,இது 101,102 என இரண்டு மாடூல்களைகொண்டது. இது பல்வாய்ப்பு கேள்வி பதில் கொண்டது. லினக்ஸின் பணிபுரிந்த முந்தைய அனுபவம் எதுவும் இதற்கு தேவையில்லை ஆயினும் கணிப்பொறியை பற்றிய அடிப்படை அறிவை பெற்றிருந்தால் மட்டும் போதும்.

LPIC2 இதில் 201,202ஆகியஇரண்டு மாடூல்களால் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஒரு இடைநிலை அளவு தேர்வாகும்

LPIC3 இதில் 301,302 ஆகிய இரண்டு மாடூல்களில் தேர்வு நடத்தப்படுகின்றன இது சீனியர் நிலை தேர்வாகும் .

இவைகளில் உங்கள் பெருளாதார நிலைக்கு ஏற்ற அளவு தேர்வினை எழுதி வெற்றி பெறுங்கள். இந்த வாய்ப்பினை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தகுதிக்கேற்றபணியினைபெற்று வாழ்வில் கணிசமான பொருளை ஈட்டுங்கள்
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum