தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
Latest topics
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்
by  Sun Mar 31, 2013 7:17 am

Log in

I forgot my password

Top posting users this week

Social bookmarking

Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



தி.மு.க., சிறை நிரப்பும் போராட்டம்: காலையில் கைது, மாலையில் விடுதலை

Go down

தி.மு.க., சிறை நிரப்பும் போராட்டம்: காலையில் கைது, மாலையில் விடுதலை

Post by janani on Wed Jul 04, 2012 9:21 pm

சென்னை: சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட
ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினர் மாலையில் விடுதலையானார்.
இப்போராட்டம் தொடர்பாக, மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று மாலையே விடுதலையாகினர்.
நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட தி.மு.க.,வினரை போலீசார் விடுதலை செய்தனர்.
ஆனால் அவர்கள் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள்
கலைந்து சென்றனர்.தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர்
ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் அழகிரி உள்ளிட்ட சிலர் இந்த
போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனிடையே முதல்வர் உத்தரவுப்படி
தி.முக.,வினர் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தமிழக போலீஸ்
டி.ஜி.பி., கூறியுள்ளார்.

போராட்டம் வெற்றி: ஸ்டாலின்: போராட்டத்தில் கலந்து கொண்ட
தி.மு.க.,வினர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். சென்னையில் கைது
செய்யப்பட்ட ஸ்டாலின், ‌கனிமொழி, டி.ஆர்.பாலு தி.மு.க., முன்னணி தலைவர்கள்
விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட
தி.மு.க.,வினர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின்,அரசின்
அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தி.மு.க.,வினர் போராட்டத்தில் கலந்து
கொண்டனர். இந்த போராட்டத்தில் போலீசாரின் தகவல்படி 93 ஆயிரம் பேர் கலந்து
கொண்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. சிறையில்
அடைக்க வழியில்லாததால் போலீசார் விடுதலை செய்துள்ளனர். இந்த போராட்டத்தில்
கலந்து கொண்ட கட்சி தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சிறையில் அடைக்க முடியாத அளவிற்கு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என
கூறினார்.

நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட தி.மு.க.,வினர் திருமண மண்டபத்தில் தங்க
வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் திருமண மண்டபத்தை விட்டு செல்லலாம் என
போலீசார் கூறினர். இதனைதொடர்ந்து வெளியே வந்த தி.மு.க.,வினர் அப்பகுதியில்
சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக போலீசார்
கூறியதை தொடர்ந்து தி.மு.க.,வினர் ‌கலைந்து சென்றனர்.

முதல்வர் உத்தரவுப்படி விடுதலை: டி.ஜி.பி.,: தி.மு.க.,வினர்
முதல்வர் உத்தரவுப்படி விடுதலை செய்யப்படுகின்றனர். தி.மு.க.,வினர் மீது
வழக்குப்பதிவு செய்ய மட்டும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த
போராட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. மாநிலம்
முழுவதும் தி.மு.க.,வினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

கருணாநிதி பேட்டி: சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடந்த
தி.மு.க.,வின் சிறைநிரப்பும் போராட்டம் பிரமாண்டமாக வெற்றி
பெற்றுள்ளதாகவும், தொண்டர்கள் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் பங்கேற்றனர்
என்றும் தி.மு.க.,தலைவர் கருணாநிதி கூறினார். அவர் மேலும் கூறுகையில்;
தொண்டர்களை ஆந்திராவில் அடைப்போம் என்றெல்லாம் அரசு மிரட்டுகிறது. நாங்கள்
எந்த சிறையில் அடைத்தாலும் அஞ்ச போவதில்லை. போலீசாரின் அச்சுறுத்தலையும்
மீறி இன்று நடந்த போராட்டம் பிரமாண்டமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த
போராட்டத்திற்கு பின்னரும் அரசு திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

சிறையை கண்டு தி.மு.க., அஞ்சாது:
மு.க,.ஸ்டாலின் பேட்டி: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட
மு.க., ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில்; எத்தனையோ அடக்குமுறைகளை
தி.மு.க,. பார்த்திருக்கிறது. எங்களை கைது செய்து எந்த பிரிவில் வழக்கு
போட்டாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். தமிழகம் முழுவதும்
ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். போராட்டத்தை முடக்க
ஜெ., எடுத்த திட்டம் பலிக்கவில்லை. அறப்போராட்டம் மாபெரும் வெற்றி
பெற்றுள்ளது. எத்தனை நாள் சிறையில் வைத்தாலும் அதனை கண்டு நாங்கள்
அஞ்சுவதில்லை. சிறையை கண்டு தி.மு.க., அஞ்சாது என்றார்.

தலைவர்
கருணாநிதி சொன்னதை விட 50 ஆயிரத்திற்கும் மேலாக லட்சம்பேர் கைதாவார்கள்
என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த போராட்த்தை பார்த்தாவது ஆளும்
கட்சி, குறிப்பாக ஜெயலலிதா திருந்த வேண்டும் இல்லையென்றால் மீண்டும்
போராட்டம் நடத்துவது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும்.

பேட்டிக்கு
பின்னர் போலீசார் ஸ்டாலினை கைது செய்து பஸ்சில் ஏற்றி கொண்டு சென்றனர்.
இது போல் சென்னை சைதாப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழியும் கைது
செய்யப்பட்டார்.

போராட்டம் தொடரும் என்கிறார் கனிமொழி: தமிழக
அரசு தி.மு.க.,வினரை திட்டமிட்டு கைது செய்து வருகிறது. இதனை
தி.மு.க.,வும் தலைவரும் பொறுத்து கொள்ள மாட்டார்கள். இதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கவே இன்றைய போராட்டம் நடக்கிறது. மாநில அரசின் இந்த கைது நடவடிக்கை
தொடருமானால் தி.மு.க.,வின் போராட்டமும் தொடரும் என கைது செய்யப்பட்டு
அழைத்து செல்லப்படும் போது கனிமொழி கூறினார். அ.தி.மு.க,.அரசினால் மக்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு வரும் 2014 ல் வரும் லோக்சபா
தேர்தலில் அ.தி.மு.க,.வுக்கு பாடம் புகட்டுவர் என்றார்.

மதுரையில்
அணி- அணியாக வந்த அழகிரி ஆதரவாளர்கள்: மதுரையில் கலெக்டர் ஆபீஸ் மற்றும்
தாலுகா ஆபீஸ் திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி , மேலூர்,
வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்டாலின் மற்றும்
அழகிரி ஆதரவாளர்கள் தங்கள் அழைத்து வந்த தொண்டர்களுடன் மன்னன், ராமஜெயம்,
பொன்முத்துராமலிங்கம் என அவரவர்கள் அணி, அணியாக கைதாகினர்.

தி.மு.க., போராட்டத்தில் கைதாகாதவர்கள் யார் ?
இன்றைய சிறை நிரப்பும் போராட்டத்தில் கைதாகாதவர்கள் விவரம் வருமாறு:
தி.மு.க,பொதுசெயலர் அன்பழகன், மாஜி அமைச்சர்கள் ஆற்காடு வீராச்சாமி, மத்திய
அமைச்சர்கள் அழகிரி உள்பட யாரும் கைது ஆகவில்லை. திருச்செந்தூரில் உள்ள
அனிதாராதா கிருஷ்ணன் போராட்டத்திற்கு வரவில்லை.

குஷ்பு சென்னையில் கைது:
தி.மு.க, இன்று நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் நடிகை குஷ்பு ,
தயாநிதி, மாஜி அமைச்சர் ரஹ்மான்கான்( சென்னை) , டி.பி.எம்.,மைதீன்கான் (
நெல்லை) பூங்கோதை (நெல்லை) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை மற்றும்
திருப்பூரில் பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், உள்ளிட்ட7 இடங்களில் போராட்டம்
நடத்தப்பட்டது. கோவை ‌பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் ஆயிரக்கணக்‌கானோர்
கைது செய்யப்பட்னர். திருச்சியில் நேரு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினரை பொய்வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதால்
அதிர்ந்து போன கட்சியின் தலைமை சிறை நிரப்பும் போராட்டத்தை
அறிவித்துள்ளனர். இன்று அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஒன்றியம் வாரியாக
கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடத்தி
சிறைக்கு செல்ல அனைவரும் தயாராகுங்கள் என கருணாநிதி தொண்டர்களை
உசுப்பேற்றினார்.

ஏற்கனவே பலரும் சிறைக்கு சென்று வரும் நேரத்தில்
நாமும் சிறைக்கு செல்வதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, கட்சியின் கட்டளையை
நிறைவேற்ற வேண்டும், அ,தி.மு.க.,ஆட்சிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற
எண்ணம் தொண்டர்கள் மத்தியில் பிறந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய
போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட தி.மு.க.,வட்டாரம் தயார்படுத்தியது.
அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாஜி அமைச்சர்கள் இந்த
போராட்டத்திற்கு தலைமை வகிக்கின்றனர். சென்னை கொளத்தூரில் மு.க.,ஸ்டாலின்
தலைமை ஏற்றார்ர். கனிமொழி போராட்டத்தில் பங்‌கேற்க கோர்ட்டில் சிறப்பு
அனுமதியும் பெற்றுள்ளார்.

வன்முறை நடக்காமல் தடுக்க உஷார்:
இந்த போராட்டத்தின் போது போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில்
ஈடுபடும்போது வன்முறை எதுவும் நடவாமல் தடுக்க போலீசார்
அறிவுறுத்தப்பட்டனர். இதனால் போராட்டக்களத்தில் ஆயிரக்கணக்கான போலீசார்
குவிக்கப்பட்டனர்.


avatar
janani
தமிழ் பூங்காவின் மிகவும் முக்கியமானவர்
தமிழ் பூங்காவின் மிகவும் முக்கியமானவர்

பதிவுகள் : 60
மதிப்பீடு : 90
சேர்ந்த நாள் : 02/05/2012

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum