தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 12 users online :: 0 Registered, 0 Hidden and 12 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm



சமையல் குறிப்புகள்: குழம்பு வகைகள் 30

Go down

சமையல் குறிப்புகள்: குழம்பு வகைகள் 30 Empty சமையல் குறிப்புகள்: குழம்பு வகைகள் 30

Post by  Thu May 10, 2012 7:08 pm

தக்காளி குழம்பு
சமையல் குறிப்புகள்: குழம்பு வகைகள் 30 Images?q=tbn:ANd9GcSQQ7hK7eZglvgEX0DloDs53TJvynGh-RKpqaUa6xIlr9io9pMR9Aதேவையானவை:
நாட்டுத் தக்காளி, பெங் களூர் தக்காளி – தலா 2 (மிக்ஸியில் ஒன்றி ரண்டாக
அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் – 1, பூண்டு –
2 பல், பொடியாக நறுக்கிய தேங் காய் – சிறிதளவு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூ
ன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய
கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத் தம் பருப்பு,
கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு… பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய்,
பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள்,
மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு,
உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரை
த்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம்
வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண் ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.


சுக்கு குழம்பு:

தேவையானவை:
சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ் பூன், புளி – பெரிய நெல்லிக்காய்
அளவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப், நறுக்கிய தக்காளி –
கால் கப், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப் பிலை – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – அரை டீஸ் பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண் ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக
சேர்த்து மிக்ஸி யில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு,
காய்ந்த தும் கடுகு, உளுத் தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன
வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளி யை ப் போட்டு
வதக்கி, புளிக் கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்
கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொ டித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு
கொதி வந்ததும் இறக்கவும்.


வேர்க்கடலை குழம்பு

தேவையானவை:
வேர்க்கடலை – அரை கப் (ஊற வைத்து, வேக வைக்கவும்), தேங்காய் துண்டுகள் – 2
(அரைக்கவும்), கடுகு, உளுத் தம்பருப்பு, சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
புளிக் கரைசல், பொடி யாக நறுக்கிய வெங்காயம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகாய் த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்
பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு… அரைத்த தேங்காய், மஞ்சள்தூள்,
மிளகா ய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
வேக வைத்த வேர்க் கடலை யைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து
வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு,
சீரகத்தூள், கறிவே ப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங் காயத்தைச்
சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதி க்கும் குழம்பில் கொட்டி
இறக்கவும்.


பிடிகருணை குழம்பு

தேவையானவை:
பிடிகருணை – கால் கிலோ (வேக வைத்து, தோலுரித்து, வட்டமாக நறுக்கவும்),
சின்ன வெங்காயம் – 10 (ஒன் றிரண்டாக தட்டிக் கொள்ளவும்), கீறிய பச்சை
மிளகாய் – 2, மஞ்சள் சமையல் குறிப்புகள்: குழம்பு வகைகள் 30 Images?q=tbn:ANd9GcROSYYBgTXhOH4sANYwehTgYfeRfHsAnJ13AyPfXoWmfg-ltywpதூள்
– அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – இரண்டரை டீஸ்பூன், தேங்கா ய்ப்பால் – ஒரு
கப், புளி – எலுமிச்சை அளவு (கரை த்துக் கொள்ள வும்), வறுத்து பொடித்த
சீரகம் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு


செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் புளிக் கரைசல், வெங் காயம், சீரகம், கீறிய பச்சை
மிளகாய், மஞ் சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, எண்ணெய் விட்டு
அடுப்பில் வைத்து மூடி, கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதி த்ததும் தேங்
காய்ப்பால், வேக வைத்த கிழங்கை சேர்த்து மிதமான தீயில் தள தளவென கொதிக்க
வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இற க்கவும்.


அரைக்கீரை குழம்பு

தேவையானவை:
அரைக்கீரை – ஒரு சிறிய கட்டு (ஆய்ந்து, கழுவி நறுக்கிக் கொள்ளவும்), பச்சை
மிளகாய் – 3, பூண்டு – 5 பல், நாட்டுத் தக்காளி – 4, சின்ன வெங்காயம் – 5,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப் பிலை –
சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்க வும். வெங்காயத்தை தோல்
உரித்துக் கொள்ளவும். குக்கரில் கீரை, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன
வெங்காயம், தக்காளி யைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து,
மூன்று விசில் வந்ததும் இறக்கி, உப்பு சேர்த்து மத்தினால் நன்றாகக்
கடையவும்.


கடாயில்
எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம்
போட்டு, பொரிந்ததும் கீரைக் கலவையில் சேர்த்துக் கடையவும்.


மோர்க் குழம்பு

தேவையானவை:
தேங்காய் துண்டுகள் – 2, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் –
3, பூண்டு – ஒரு பல், இஞ்சி – சிறிய துண்டு, சீரகம் – 2 டீஸ்பூன் (இவற்றை
ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்), மோர் – ஒரு கப், மஞ்சள்தூள்,
வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங் காயம், வெண்டைக்காய் (அ)
கத் திரிக்காய் வத்தல் (எண் ணெயில் வறுத்துக் கொள்ளவும்), வெள்ள ரிக்காய்,
கொத்தமல்லி – சிறித ளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தே வையான அளவு.


செய்முறை:
அடி கனமான பாத்தி ரத்தில் மோரை விட்டு, அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள்,
உப்பு போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். கலர் மாறியதும்,
சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வறுத்தவத் தல், வெள்ளரிக்காயைச்
சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.


கடாயில்
எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்,
பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து குழம்பில் கொட்டி,
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


வெண்டைக்காய் குழம்பு

தேவையானவை:
வெண்டைக்காய் – கால் கிலோ, வெங்காயம் – 1, கீறிய பச்சை மிளகாய், தக்காளி –
தலா 2, பூண்டு – 2 பல், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால்
டீஸ்பூன், மிளகாய்தூள் – 2 டீஸ் பூன், தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் –
ஒன்றரை டீஸ்பூன், கறிவே ப்பிலை, குழம்பு பொடி – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2
டேபிள்ஸ் பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வெங்காயம், வெண் டைக்காய், தக்காளியைப் பொடி யாக நறுக்கவும். தேங்காய்,
சீரக த்தை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும்
கடுகு, உளுத்தம் ப ருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை
ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி, மஞ்சள்தூள்,
உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி… மிளகா ய்த்தூள், தேங்காய் – சீரகம்
விழுதைப் போட்டு வதக்கவும். கடை சியாக புளியைக் கரைத்து ஊற்றி, சிறிது
தண்ணீர் விட்டு, குழம்பு பொடி சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.


கத்திரி | முருங்கை குழம்பு

தேவையானவை:
கத்திரிக்காய் – 100 கிராம், சிறிய முருங்கை க்காய், வெங்காயம், தக்காளி –
தலா 1, பூண்டு – 2 பல், மிளகு – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு
டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சமையல் குறிப்புகள்: குழம்பு வகைகள் 30 Images?q=tbn:ANd9GcTZKxXS4VdybMGzdsrGWlc430NyOJQ-DN4tAAiylyEav5-Z2H-0மிளகாய்த்தூள்
– 2 டீஸ்பூன், தனியாத்தூள், வறுத்து பொடித்த சீரகம், கடுகு,
உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப் பிலை – சிறிதளவு, புளி –
நெல்லி க்காய் அளவு, எண்ணெய், உப்பு – தேவை யான அளவு.


செய்முறை:
கத்திரிக்காய், முருங் கைக்காய், தக்காளி, வெங் காய த்தை நறுக்கிக் கொள்
ளவும். அடுப்பில் கடாயை வைத்து, காய்ந்ததும் எண்ணெய் விட்டு… கடுகு,
உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை, துவரம்பருப்பு போட்டு தாளித்து, பொடியாக
நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில்
முருங்கைக்காய் சேர்த்து வதக்கி, கத்திரிக்காய், தக்காளி, உப்பு,
மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாத் தூள் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
புளியைக் கரைத்து ஊற்றி, காய் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு மூடி
வைக்கவும். தீயைக் குறைத்து, சீரகத்தூளை சேர்த்து, எண்ணெய் பிரிந்து
வந்ததும் இறக்கவும்.


கடலைப்பருப்பு குழம்பு

தேவையானவை:
கடலைப்பருப்பு – 100 கிராம், வாழைக்காய், தக் காளி, வெங்காயம் – தலா 1,
பச்சை மிளகாய் – 2, பூண்டு – 3 பல், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய்
துண்டுகள் – 2, சீரகம், தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3,
குழம்பு பொடி – ஒன்றரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு –
தேவையான அளவு.


செய்முறை:
தேங்காய், சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் ஆகிய வற்றை சேர்த்து
ஒன்றிரண்டாக பொடிக்கவும். காய்கறிகளை பொடியாக நறுக்கவும். குக்கரில்
கடலைப்பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து,
தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்
விட்டு மூடி வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய் ந்ததும் கடுகு,
உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து
பொன்னிறமாக வதக்கவும். இத னுடன் ஒன்றிரண்டாக அரைத்த பொடி, குழம்பு பொடி,
உப்பு, பெருங்காயம் போட்டு நறுக்கிய வாழைக்காயைப் போ ட்டு வதக்கி, வேக
வைத்த பருப்பில் கொட்டி, சிறிது தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதித்ததும்
இறக்கவும்.


சிறு பருப்பு குழம்பு

தேவையானவை:
பயத்தம்பருப்பு – ஒரு சிறிய கப், தக்காளி, சௌ சௌ, வெங்காயம் – தலா 1,
பூண்டு – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள், குழம்பு பொடி – தலா ஒரு
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – சமையல் குறிப்புகள்: குழம்பு வகைகள் 30 Images?q=tbn:ANd9GcRREVICt4H9mz2y0P4kyqR4MhFljEsl3g55NiADz9gyyZMzSS8PVQதேவையான அளவு.


செய்முறை:
சௌசௌ, தக்காளி, வெங்காயம் மூன் றையும் நறுக்கிக் கொள்ளவும். குக்கரில்
பயத்தம் பருப் பு, தக்காளி, பூண்டு, மஞ்ச ள்தூள் போட்டு, சிறிது தண் ணீர்
விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள், வெங்காயம், காய்ந்த மிளகாய்,
கறிவேப் பிலை, பெருங்காயம், குழம்பு பொடி சேர்த்து… நறுக்கிய சௌசௌ, தேங்
காய் துருவல், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். இதை, வெந்த பருப்புடன்
சேர்த்துக் கொதிக்க விடவும். சௌசௌ நன்றாக வெந் ததும் இறக்கவும்.


மீல் மேக்கர் குழம்பு

தேவையானவை:
சோயா உருண்டைகள் – முக்கால் கப், வெங்காயம் – 1, தக்காளி – 3,
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், வறுத்துப் பொடித்த சீரகம் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவே ப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு,
உளுத்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2
டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வெங்காயத்தைப் பொடி யாக நறுக்கவும். சோயாவைக் கொதிக் கும் தண்ணீரில்
போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, நன் றாகப் பிழிந்து கொள்ளவும். கொதிக்கும்
நீரில் தக்கா ளியைப் போ ட்டு 2 நிமிடம் வைத்தி ருந்து எடுத்து, தோலுரித்து
ஒன் றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு,
காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டு தாளித்து,
வெங்காயத்தைப் போட் டு நன்றாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து
வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவே ப்பிலை, கொத்தமல்லி, உப்பு,
அரைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும், சோயா உருண்டைகளை
சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் (தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்)
விட்டு, வறுத்துப் பொடித்த சீரக த்தைப் போட்டு, ஒரு கொதி வந்ததும்
இறக்கவும்.


மணத்தக்காளி குழம்பு

தேவையானவை:
பச்சை மணத்தக்காளிக்காய், நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் – தலா
ஒரு கப், பூண்டு – 4 பல், தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், குழம்பு பொடி – 2
டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,


செய்முறை:
மணத்தக்காளியைக் கழுவி காம்பு நீக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு,
காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பூண்டு, நறுக்கிய வெங்காயம்
சேர்த்து நன் றாக வதக்கி… கறிவேப்பிலை, நறுக்கிய தக் காளி, மஞ்சள்தூள்,
மிளகாய்தூள், குழம்பு பொடி, உப்பு போட்டுக் கிளறவும். மணத் தக்
காளிக்காயைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, புளியைக் கரைத்து
விட்டு, காய் வேகும் வரை கொதிக்க விடவும். இதில் தேங்காய்ப் பால் சேர்த்து,
மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து, எண் ணெய் பிரிந்து வந்ததும்
இறக்கவும்.


பாகற்காய் குழம்பு

தேவையானவை:
மிதி பாகற்காய், சின்ன வெங்காயம் – தலா அரை கப், பூண்டு – 4 பல், தக்காளி –
2, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங் காய்ப்பால் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை
டீஸ்பூன், குழம்பு பொடி – 2 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, எண்ணெய் – 2
டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள், உப்பு – தேவையான அளவு,


செய்முறை:
மிதி பாகற்காயை காம்பு நீக்கி கழுவி, இரண்டாக நறுக்கி, சிறிது உப்பு,
மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக் கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும்
கடுகு, உளுத்தம்பருப்பு தா ளித்து… நறுக்கிய வெங்காயம், கறிவே ப்பிலை,
பூண்டு, தக்காளி சேர்த்து நன் றாக வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள்தூ ள்,
மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வேக வைத்த பாகற்காய் போட்டு மறுபடியும்
வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதி த்ததும் தேங்காய்ப்பால்
சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.


பச்சை மொச்சைப் பயறு குழம்பு

தேவையானவை:
பச்சை மொச்சைப் பயறு – கால் கிலோ, வெங்காயம், தக்காளி – தலா 1, புளி –
நெல்லிக்காய் அளவு, பூண்டு – 2 பல், தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒரு
டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், கடுகு,
உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் –
ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வெங்காயம், தக்கா ளியை நறுக்கிக் கொள்ளவும். தேங் காய், சீரகத்தை
அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட் டு, காய்ந்ததும் கடுகு,
உளுத்த ம்பருப்பு போட்டு தாளித்து, நறுக் கிய வெங்காயம் போட்டு நன்றாக
வதக்கவும். பூண்டு, தக்காளி சேர் த்து சிறிது நேரம் வதக்கி, பச்சை மொச்சைப்
பயறு போட்டு வதக்க வும். புளியை கரைத்து விட்டு… தேங்காய்-சீரகம் விழுது,
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து,
தேவையான அளவு தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, 4 விசில் வந்ததும் இறக்கவும்.


வத்தல் குழம்பு

தேவையானவை:
ஏதேனும் ஒரு வத்தல் – ஒரு கப் (சிறிது எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்),
கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – அரை
டீஸ்பூன், குழம்பு பொடி – 2 டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்,
சமையல் குறிப்புகள்: குழம்பு வகைகள் 30 Images?q=tbn:ANd9GcTOZYQFa7gjTpRmY1NkV-Y02MbNBcsHhynPPfPANRx0m5dVWQQஎண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள், உப் பு – தேவையான அளவு,


செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, காய் ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு
போட்டு தாளித்து… வெங்காயம், கறி வேப்பிலை சேர்த்து வதக்க வும்.
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வறுத்த வத்தல், உப்பு சேர்த்து,
புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய்
பிரிந்து வந்ததும் இறக்கவும்.


உருளைக்கிழங்கு மசாலா குழம்பு

தேவையானவை:
உருளைக்கிழங்கு – கால் கிலோ, பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி, கீறிய
பச்சை மிளகாய் – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு,
சீரகம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, குழம்பு பொடி –
தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறித ளவு, எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த்தூள், உப்பு – தே வையான அளவு,


செய்முறை:
உருளைக்கிழங்கு, வெ ங்காயம், தக்காளியைப் பொடி யாக நறுக்கவும். கடாயில்
எண் ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலை
ப்பருப்பு போட்டு தாளி த்து… நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை
மிளகாய், கறி வேப் பிலை, தக்காளி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக
வத க்க வும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி,
புளி யைக் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.


வெந்தயக்கீரை குழம்பு

தேவையானவை:
சின்ன வெங்காயம் – கால் கப், வெந்தயக்கீரை – ஒரு கட்டு (சுத்தம் செய்து,
பொடியாக நறுக்கவும்), பூண்டு – 4 பல், தக்காளி – 2, புளி – நெல்லிக்காய்
அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்த்தூள்,
தனியாத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், குழம்பு பொடி – ஒன்றரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு, எண் ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு – தே
வையான அளவு.


செய்முறை:
வெங்காயம், பூண்டு, தக்கா ளியைப் பொடியாக நறுக்க வும். கடாயில் எண்ணெய்
விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளித்து…
வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக் கவும். இதில், மஞ்சள்தூள்,
மிளகாய்த்தூள், தனியா த்தூள், குழம்பு பொடி, உப்பு, கீரை சேர்த்து வதக்கி,
புளியைக் கரை த்து ஊற்றி, மூடி போட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பிறகு
மூடி யைத் திறந்து, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வும்.


கொண்டைக்கடலை புளிக்குழம்பு

தேவையானவை:
கறுப்பு கொண்டைக்கடலை – ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 1, பூண்டு – 2,
இஞ்சி – அரை துண்டு, கறிவேப் பிலை – சிறிதளவு, தேங்காய் துண்டுகள் – 2,
கடுகு, உளுத் தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், புளி –
நெல் லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண் ணெய் –
ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
தக்காளி, வெங்கா யத்தை பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை விழுதாக
அரைக்கவும். கறுப்பு கொண் டக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள்
குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு,
உளுத்தம்பருப்பு தாளித்து… பூண்டு, இஞ்சி, வெ ங்காயம், தக்காளி,
கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய்-சீரக விழுதை சேர்த்து…
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், உப்பு, வெந்த கொண்டைக்கடலையைப்
போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.


மிக்ஸ்டு மிளகாய் குழம்பு

தேவையானவை:
பச்சை மிளகாய் – 10, குடமிளகாய் – 2, சின்ன வெங்காயம் – ஒரு கப், தக்காளி –
1, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு,
வெந்தயம், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு –
தேவையான அளவு.


செய்முறை:
பச்சை மிளகாய், குடமிளகாய், தக்காளி, வெங்காய த்தைப் பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந் தயம்,
சீரகம் போட்டு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து
நன்றாக வதக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, புளியைக்
கரைத்து ஊற்றி, கொதிக்கவிடவும். மிளகாய் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து
வந்ததும் இறக்கவும்.


பக்கோடா குழம்பு

தேவையானவை:
பக்கோடா – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா 1, புளி – நெல்லிக்காய்
அளவு, மிளகாய்த்தூள் – காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,


செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு,
காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு போட்டு
தாளித்து… நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்றாக
வதக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,
உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். குழம்பு
கெட்டியாக இருக்கக் கூடாது. பச்சை வாசனை போனதும் பக்கோடாவை குழம்பில்
போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.


சுரைக்காய் குழம்பு

தேவையானவை:
சிறிய சுரைக்காய், கீறிய பச்சை மிளகாய், வெங்காயம் – தலா 1, இஞ்சி-பூண்டு
விழுது, மிளகாய்த்தூள் – தலா 2 டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு,
தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால்
டீஸ்பூன், தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு
– தேவையான அளவு.


செய்முறை:
தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். காய் களைப் பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய் ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக
வதக்கவும். இ தில், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து,
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி… மிளகாய்த்தூள்,
மஞ்சள்தூள், தனியாத்தூள், அரைத்த தேங் காய்-சீரக விழுதைச் சேர்த்து
வதக்கி… சுரைக்காய், உப்பு, தேவை யான தண்ணீர் விட்டு, கொதித்து நன்றாக
வெந்ததும் இறக்கவும்.


பூண்டு குழம்பு

தேவையானவை:
தோல் உரித்த பூண்டு – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, மிளகுத்தூள் – ஒரு
டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் –
ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டை போ ட்டு வதக்கவும். இதில்
மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி,
பூண்டு வேகும் அளவு தண்ணீர் விடவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி,
நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.


சுண்டைக்காய் குழம்பு

தேவையானவை:
பச்சை சுண்டைக்காய், சின்ன வெங்காயம் – தலா ஒரு கப், தேங்காய் துண்டுகள் –
2, பூண்டு – 2 பல், கீறிய பச்சை மிள காய் – 1, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
குழம்பு பொடி – 2 டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு,
உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
பூண்டு, வெங்காயம், தேங்காயை பொடியாக நறுக் கவும். சுண்டைக்காயை காம்பு
நீக்கி, கழுவி, மத்தால் லேசாக நசுக் கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்
விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து… வெங்காயம்,
பூண்டு, கீறிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயைப்
போட்டு நன்றாக வதக்கவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, குழம்பு பொடி போட்டு,
புளியைக் கரைத்து ஊற்றி (காரம் தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்),
சுண்டைக்காய் வேகும் வரை கொதிக்க வைத்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.


பருப்புக்கீரை குழம்பு

தேவையானவை:
பருப்புக்கீரை – ஒரு கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), துவரம்பருப்பு –
முக்கால் கப், பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி – 1, மஞ்சள்தூள் – அரை
டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, தனியாத்தூள் – தலா ஒரு
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 5,
புளி – நெல்லிக்காய் அளவு, குழம்பு பொடி – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை,
கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு,
துவரம்பருப்பு, கீரை, தக்காளி, உரித்த பூண்டு பல், கீறிய பச்சை மிளகாய்,
பாதி அளவு சின்ன வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு, தேவையான அளவு தண்ணீர்
ஊற்றி, வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு,
உளுத்தம்பருப்பு தாளித்து… மீதமுள்ள வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம்,
தனியாத்தூள், கறிவேப்பிலை, குழம்பு பொடி, உப்பு போட்டு வதக்கி, புளியைக்
கரைத்து விடவும். கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கி, வேக
வைத்த பருப்புக் கலவையில் கொட்டிக் கடைந்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து
இறக்கவும்.


காலிஃப்ளவர்-பட்டாணி குழம்பு

தேவையானவை:
காலிஃப்ளவர் (தனித்தனியாக உதிர்த்து வெந் நீரில் போட்டு எடுக்கவும்),
பச்சைப் பட்டாணி – ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 1, பச்சை மிளகாய்,
தேங்காய் துண்டுகள் – தலா 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள்,
இஞ்சி-பூண்டு விழுது – தலா 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்ந்தது
– ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு, –
தேவையான அளவு.


செய்முறை:
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து
அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம்,
ஏலக்காய் போட்டு வதக்கி… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு
விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள்,
உப்பு, காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி போட்டு, மிதமான தீயில் நன்றாக
வதக்கவும். கடைசியில் தேங்காய் – சீரக விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான
அளவு தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து காய்கறி நன்றாக வெந்ததும் இறக்கவும்.


வாழைப்பூ குழம்பு

தேவையானவை:
வாழைப்பூ – 1 (ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கவும்), ஒன்றிரண்டாக
தட்டிய சின்ன வெங்காயம், தேங்காய்ப் பால் – தலா ஒரு கப், சீரகம் – 2
டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
ஆய்ந்த வாழைப்பூவை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு
பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, வெங்காயம், சீரகத்தைப் போட்டு…
உப்பு, மஞ்சள்தூள், மிளகா ய்த்தூள், எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து
கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் வெந்த வாழைப்பூ, தேங்காய்பால்
சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.


காளான் குழம்பு

தேவையானவை:
நறுக்கிய காளான் – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, தேங்காய் துண்டுகள் –
2, சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – 3 டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
தேங்காய், மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள் ளவும். ஒரு
பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு… நறுக்கிய காளா ன், சின்ன வெங்காயம்,
அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள்தூள், மிள காய்த்தூள், தனியாத்தூள்,
கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளி த்து, அடுப்பில் வைத்து தட்டால்
மூடவும். லேசாக வெந்ததும் மூடி யைத் திறந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு,
காளான் வேகு ம்வரை கொதிக்க வைத்து இறக்கவும்.


குண்டு மொச்சை குழம்பு

தேவையானவை:
குண்டு மொச்சை – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, முருங்கைக்
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum