Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 31 users online :: 0 Registered, 0 Hidden and 31 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
"உருவகக் கதைகள்" கழுதை!.
Page 1 of 1
"உருவகக் கதைகள்" கழுதை!.
(குறும்படம் சிறு கதையாக)
முனுசாமி, என்று ஒரு சலவைத் தொழிலாளி வாழ்ந்து வந்தார்...
தினமும் ஊருக்கருகில் இருக்கும் குலத்திற்கு சென்று துணிகளை துவைத்து வருவது அவரது வாடிக்கையான செயல். ஆரம்ப காலத்தில் அவர் கழுதையில் சென்றுதான் துணிகளைத் துவைத்து வந்தார், தனது தொழில் சிறப்பு காரணமாக அதிக லாபம் சம்பாதித்து நாளடைவில் ஒரு இரண்டு சக்கர வாகனம் வாங்கினார், அதன் பிறகு அவர் கழுதையில் செல்வதைத் தவிர்த்து விட்டார். ஆனாலும், தனது வளர்ச்சிக்கு அந்தக் கழுதை தான் காரணம் என்பதால் அதை தனது வீட்டிலேயே கட்டி வைத்து வளர்த்து வந்தார். அந்த ஊரில் திருட்டுப் பயம் அதிகம் இருந்ததால், தன்னிடம் சலவைக்காக வந்துள்ள விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை யாராவது திருட வரலாம் என்பதற்காக, அதை அறிந்து கொள்வதற்காக அவர் வீட்டில் ஒரு நாயையும் வளர்த்து வந்தார்.
அவர் நினைத்தது போலவே ஒரு நாள் வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து விட்டனர்.... முனுசாமியோ அசந்து தூங்கிக் கொண்டு இருந்தார், ஆனால் அவர் வளர்த்து வந்த நன்றியுள்ள நாய் குலைத்து திருடர்களை காட்டிக் கொடுத்து விட்டது. உடனே முனுசாமி விழித்து எழுந்து வந்தார், அவரைப் பார்த்ததும் திருடர்கள் தலை தெறிக்க ஓடி விட்டனர். முனுசாமி தனது நாயைப் பார்த்து பெருமைப் பட்டார், நாய் பாசத்தோடு அவரைப் பார்த்து வாலாட்டியது. பிறகு அதற்காக வாங்கி வைத்திருந்த பிஸ்கெட்களில் கொஞ்சம் அதிகமாகவே எடுத்துவந்து போட்டு, நாயை தடவிக் கொடுத்து விட்டு சென்றார். இதை எல்லாம் அசை போட்டுக் கொண்டே கழுதை பார்த்துக் கொண்டிருந்தது...!
நாட்கள் கடந்தன ....
ஒருநாள், ஒரு திருமண வீட்டுத் துணிகளைத் துவைத்த களைப்போடு அசந்து தூங்கினார் முனுசாமி.... அதே திருடர்கள் மீண்டும் வந்தனர்.... ஆனால் வந்தவர்கள் உடனடியாக நாய்க்கு மயக்க மருந்து தடவிய பிஸ்கெட்டை போட்டு விடுகின்றனர், நாயும் குலைக்காமல் அந்தப் பிஸ்கெட்டை சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு வாலாட்டியது. சிறிது நேரத்தில் நாய் மயங்கியது... அதுவரை மறைந்திருந்து காத்திருந்தவர்கள் தைரியமாக உள்ளே நுழைந்தனர். அப்போது... அவர்கள் சற்றும் எதிர் பார்க்காத நிலையில் அங்கிருந்த "கழுதை" கத்தத் தொடங்கியது.... திருடர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது தடுமாறினார்கள். கழுதையின் சத்தம் கேட்டதும் முனுசாமி எழுந்து வந்து பார்க்கிறார்.... யாரையும் காணவில்லை. நாயைப் பார்கிறார் அது தூங்கிக் கொண்டு இருக்கிறது... பிறகு சென்று தூங்கத் தொடங்கினார்.
அதன் பிறகு அந்தத்திருடர்கள் மீண்டும் உள்ளே நுழைய முயற்சிக்க... மீண்டும் கழுதை கத்தியது... முனுசாமி வருகிறார்.... சுற்றும் முற்றும் பார்க்கிறார்... கழுதையின் மேல் சிறிய கோபத்தோடு, மீண்டும் சென்று தூங்கினார். திருடர்கள் மீண்டும் உள்ளே நுழைய முயற்சிக்க... மீண்டும் கழுதை கத்தியது... முனுசாமி வருகிறார்.... சுற்றும் முற்றும் பார்க்கிறார்... அவருக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. பக்கத்தில் இருந்த ஒரு பெரிய தடியை எடுத்து, தன் ஆத்திரம் தீரும் வரை அந்தக் கழுதையை அடித்தார்...
" கழுதை! உனக்கு இப்ப என்ன வந்துச்சு... காலையில இருந்து துணி வெளுத்துட்டு, இப்பதான் அசந்து தூங்கப் போனேன், ஏன் இப்படி கத்தி உயிரை வாங்குறே?
உனக்கு சும்மா வச்சி சாப்பாடு போடுறது தப்புதானே?... நாளைக்கே உன்னை யார்கிட்டயாவது வித்துடுறேன்...." என்று பலவாறு திட்டிக் கொண்டே சென்று தூங்கினார்.... அதன் பிறகு கழுதையால் கத்த முடிய வில்லை.
காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த துணிகள், மற்றும் பொருட்கள் எதையும் காணவில்லை! அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தார் முனுசாமி...
வாசலில் கட்டப் பட்டிருந்த கழுதை கண்ணீரோடு நின்று கொண்டிருந்தது...! நாய் இன்னும் எழுந்திரிக்க வில்லை. அருகில் சென்று பார்த்தார், அப்போது தான் நாய் மயங்கிக் கிடக்கிறது என்று அவருக்குப் புரிந்தது. இரவு கழுதை கத்தியதன் அர்த்தம் அவருக்குப் இப்போது புரிந்தது. நாய் குலைத்தால் தான் திருடர்கள் வருவார்கள் என்ற தனது தவறான எண்ணத்தை உணர்ந்த அவர் கழுதையை பாசத்தோடு தடவிக் கொடுக்கத் தொடங்கினார்...!

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» நகைச்சுவை கதைகள்
» தெனாலி ராமன் கதைகள் - கிடைத்ததில் சம பங்கு
» தெனாலி ராமன் கதைகள் - ராஜகுருவின் நட்பு
» தெனாலி ராமன் கதைகள் - வித்தைக்காரனை வென்ற கதை
» தெனாலி ராமன் கதைகள் - கூனனை ஏமாற்றிய கதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum